Translate

ஞாயிறு, அக்டோபர் 26, 2014

மாங்குயில்-Eurasian golden oriole

மாங்குயில்  
                      உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை. இதன் அறிவியல் பெயர் ஓரியோலசு ஓரியோலசு(Oriolus oriolus). கண்ணருகேயும் கறுப்புத் திட்டுகள் இருக்கும். ஏறாத்தாழ 22-25 செ.மீ  (9-10 அங்குலம்) நீளமுடைது. வீட்டுக் குருவியை விடப் பெரியது. சற்றேறக்குறைய மைனா  அளவுடைது. இது மாமரத்தில் காணப்படுவதாலும், மாம்பழம் போல் மஞ்சளாக  இருப்பதாலும் மாங்குயில் எனப்படுகின்றது. இதன் குரல்  இனிமையாக இருக்கும் . மாங்குயில் முட்டைகள் வெளிரிய இளம் பழுப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும். கூட்டில் 3-4 முட்டைகள் இருக்கும். இதன் குஞ்சுகள் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். குஞ்சுகளின் தொண்டை,, நெஞ்சுப்பகுதிகளும் அடிப்பகுதிகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அடர்ந்த நிறத்தில் கோடு கோடாக இருக்கும். 
Pirol

மாங்குயில் கூவுவதைக்கேட்க http://www.nabu.de/aktionenundprojekte/vogeldesjahres/1990-derpirol/

             தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர்கருந்தலை மாங்குயில் (அறிவியல் பெயர் ஓரியோலசு காந்தோமசுOriolus xanthomus). ஓரியோலசுக் குடும்பத்தைச் சேர்ந்த இவை தவிர மாங்குயில் போலவே தோற்றம் அளிக்கும் அமெரிக்க மஞ்சக்குயில்கள்  ஆங்கிலத்தில் ஓரியோல் (Oriole) என்னும் அதே பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை முற்றிலும் வேறு பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்க மஞ்சக்குயில்கள் அறிவியல் வகைப்பாட்டின்படி இக்டேரசு (Icterus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக