Translate

செவ்வாய், அக்டோபர் 02, 2012

சாக்லேட் விரும்பியா நீங்கள்?

சாக்லேட் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? இதோ உங்களுக்கோர் அதிர்ச்சி தரும் தகவல்..........
சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி அதிகளவில் சாப்பிடுவதால் போதைக்கு அடிமையானவர்களாக மாறவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அதிக அளவு சாக்லேட் சாப்பிடுவதால் போதையில் தள்ளப்படுவர்களாம்! அதுவும் அபின் போன்ற போதை மருந்து சாப்பிடுவர் போன்று அடிமையாக மாறி விடுவர்கள் என்று ஒரு அதிர்ச்சி தரும் தகவல் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இயற்கையாவே நம் மூளையினுள் என்கெப்லின் என்ற ரசாயன திரவம் உள்ளது. சாக்லேட் அதிகம் சாப்பிடும் போது என்கெப்லின் திரவம் இரு மடங்காக சுரக்கின்றது. எனவே மூளைக்கு செல்லும் உணர்வு நரம்புகளை பாதித்து செயலிழக்க செய்து போதையை உண்டாக்குகிறது.
எனவே தொடர்ந்து சாக்லேட் சாப்பிடுவது, அபின் போன்ற போதை பொருள் சாப்பிடுவதற்கு சமம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக