Translate

சனி, செப்டம்பர் 15, 2012

தெரிந்து கொள்ளுங்கள்...Know ....More...



உணவுப் பழக்கம்...சீனர்கள் சாப்பிடும்போது பேசவே மாட்டார்கள். இங்கிலாந்தில் உணவருந்தும் போது உரையாடல் மிகவும் முக்கியமான அம்சமாகும். சுவையான உரையாடல் மோசமான உணவையும் சுவையானதாகச் செய்துவிடும் என்று அவர்கள் கூறுவார்கள்.இஸ்ரேலில் இறைச்சியை சிவப்புத் தட்டிலும் பாலை நீலக் கோப்பையிலும்தான் வழங்குவார்கள். இரண்டையும் சேர்ந்தாற்போல மேஜையில் பரிமாற மாட்டார்கள். ஆங்கிலேயர்கள் ஒரு கையில் கத்தியையும் மற்றொரு கையில் முள்கரண்டியையும் பிடித்துக் கொண்டு, கத்தியால் வெட்டி, முள்கரண்டியால் குத்தி எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள்.அமெரிக்கர்கள் கத்தியால் வெட்டி, அதைத் தட்டில் வைத்துவிட்டு, முள்கரண்டியால் எடுத்து வாயிலிட்டுக் கொள்வார்கள்.கறையான் காட்டும் உண்மை!கறையான் புற்றுக்கள் உள்ள இடத்தில் பூமிக்கடியில் உலோகத் தாதுக்கள் இருக்கும் என்று ஆறாம் நூற்றாண்டில் வராகமிகிரர் எழுதிய "பிருஹத் சம்ஹிதை' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.அனந்தப்பூர் அருகே, தங்கக் கனிமம் இருக்குமிடத்தை ஆராய்ந்ததில் கறையான் புற்றுக்கள் உள்ள இடத்துக்குக் கீழே அதிக அளவு தங்கம் இருப்பது ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது.-தொகுப்பு: சி.இராஜேஸ்வரி, தூத்துக்குடி.டிக்ஷனரியைப் படித்தவர்!* காகிதக் கப்பல் செய்து நீரில் விட்டு மகிழ்வது கவிஞர் ஷெல்லியின் வழக்கமாம்.* எர்னஸ்ட் ஹெமிங்வே, நாவல்களை எழுதப் பென்சிலைத்தான் பயன்படுத்துவாராம்.* ஐன்ஸ்டீன் ஷேவ் செய்யும்போது விசிலடித்துப் பாடுவாராம்.* விதவிதமான தொப்பிகளைச் சேகரிப்பதென்றால் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு மிகவும் பிடிக்கும்.* விக்டர் ஹ்யூகோ, புகழ்பெற்ற "லே மிஸரபிள்' நூலை நின்றுகொண்டே எழுதினாராம்.* சார்லஸ் டிக்கன்ஸýக்கு கட்டிலில் ஒரு குறிப்பிட்ட நிலையில் படுத்தால்தான் தூக்கம் வருமாம்.* தீயணைப்பு வாகன ûஸரன் சப்தம் கேட்டால் லியோ டால்ஸ்டாய் மெய்ம்மறந்து விடுவாராம்.* அலெக்ஸôண்டர் டூமாஸ் எழுதும்போது நண்பர்கள் வந்தால் வலது கையால் எழுதிக் கொண்டே இடது கையால் கைகுலுக்குவாராம்.* டிக்ஷனரியைக் கையில் எடுத்தால் நேரம் போவதே தெரியாமல் படிப்பாராம் ஆபிரகாம் லிங்கன்.-தொகுப்பு: ஆ.விஜி, திருநெல்வேலி.ஒரு சொல் இரு பொருள்!1. அங்காடிக்கு மறுபெயர் என்ன? முதலுக்கு எதிர்ச்சொல் என்ன? (கடை)2. நனையாமலிருக்க பிடிப்பதென்ன? கிண்டித் துளைத்திடச் சொல்வதென்ன? (குடை)3. பொற்கொல்லர் செய்வதென்ன? பொங்கும் மகிழ்ச்சியில் இதயத்தில் மலர்வதென்ன? (நகை)4. உண்ணும் கீரையைச் சமைப்பதெப்படி? உண்மையைக் கண்டறிவது எப்படி? (ஆய்ந்து)5. இல்லைக்கு எதிர்ப்பதம் என்ன? வயிற்றுப் பசி தீர்வதெப்படி? (உண்டு)6. அறிவு வளர்வது எதனால்? ஆடையைத் தைப்பது எதனால்? (நூலால்)7. சம்மதிக்கச் சொல்வதெப்படி? சங்கீதத்தை அழைப்பதெப்படி? (இசை)8. படமெடுத்துப் பயமுறுத்துவது எது? பெருங்கூட்டத்தால் விளைவது எப்படி? (அரவம்)தொகுப்பு: ஆ.திலீபன் கணேஷ், வண்ணார்பேட்டை.அட, அப்படியா?1. தாமரைப் பூ சூரிய உதயத்தின்போது மலரும்.2. செண்பகப் பூ மாலை 6 முதல் 7 மணிக்குள் மலரும்.3. வாழைப்பூ மாலை 5 முதல் 6 மணிக்குள் மலரும்.4. பவளமல்லிகை மாலை 6 முதல் 7 மணிக்குள் மலரும்.5. மல்லிகைப் பூ இரவு 7 முதல் 8 மணிக்குள் மலரும்.6. மனிதத் தலையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 22.7. பெண்களின் ரத்தச் சிவப்பணுக்களின் வாழ்நாள் 110.8. ஆண்களின் ரத்தச் சிவப்பணுக்களின் வாழ்நாள் 120.9. நாம் தும்மும் தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ.10. பாராசூட் தயாரிக்க உதவுவது நைலான்.11. அமில மழையை உருவாக்குவது கரியமில வாயு.12. வெப்பமானிகளில் பயன்படுவது பாதரசம்.13. சமையல் வாயுவில் அதிகம் உள்ளது பியூட்டேன்.-தொகுப்பு: எஸ்.சௌமியா, தேவனாங்குறிச்சி.விந்தையோ விந்தை...*  வேங்கைப் புலிக்கு பலாமர நிழலில் இளைப்பாறவே விருப்பம்.*  கருங்குயில் மாமரத்தில்தான் தங்கும்.*  குயிலுக்கு மாம்பழமும் நெல்லிக்கனியும்தான் விருப்பம்.*  பிச்சிப் பூ மழை நாட்களில் சிவந்து காணப்படும்.*  பாரசீக மக்கள் மாதுளம் பூவையும் பிரெஞ்சுக்காரர்கள் ரோஜாப் பூவையும் ஆங்கிலேயர்கள் செர்ரி மலரையும் கிரேக்கர்கள் ஒலிவ மலரையும் ரோமானியர்கள் முந்திரி மலரையும்தான் அதிகம் விரும்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக