Translate

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

சென்னை பல்கலை: ஜியோ இன்பர்மேடிக்ஸ் படிப்புக்கு வரவேற்பு




  சென்னை பல்கலைக்கழகத்தில். எம்.எஸ்சி., ஜியோ இன்பர்மேடிக்ஸ் என்ற இரண்டு வருட படிப்புக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கல்வித்தகுதி: விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பி.ஏ., பி.எஸ்சி., படிப்பில் (ஜயோ கிராபி, ஜியாலா, இயற்பியல், சுற்றுப்புற அறிவியல், கணினி அறிவியல், கம்யூட்டர் அப்ளிகேஷன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, அக்ரிகல்சர்) ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.+2ம் வகுப்பில் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவு எடுத்து படித்திருக்க வேண்டும். பொறியியல் படிப்பில் தேர்ச்சி  பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.300 செலுத்தி விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.350 வரைவோலை எடுத்து பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.செப்டம்பர் 28 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய www.unom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக