Translate

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

மம்முட்டியின் மனமும்...! ஹீரோக்களின் குணமும்...!!

கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு 90க்கும் அதிகமான குழந்தைகள் பலியானார்கள். விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட ஹீரோக்கள் ஓடிப்போய் அஞ்சலி செலுத்தி மாலை மாலையாய் கண்ணீர் விட்டார்கள். ஆளாளுக்கு லட்சக் கணக்கில் நிதி உதவி அளிப்பதாக அறிக்கை விட்டார்கள். ஆனால் எல்லாமே வெறும் வேஷமாகிப்போனது ஒரு சில நடிகர்கள் தவிர மற்ற யாருமே பணம் அனுப்பவில்லை. சிலர் கொடுத்த காசோலைகள் திரும்பி வந்தது. திரைக்கு வெளியேயும் தங்களை சிறந்த நடிகர்களாக நிரூபித்தார்கள் ஹீரோக்கள்.
Mammootty is Real hero: he helps to sivakasi fire accident
இப்போது சிவாகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 38 பேர் இறந்துள்ளனர். நிதி உதவி அளிக்க வேண்டாம். அல்லது அளிப்பதாக வெட்டி பந்தா அறிக்கை விட வேண்டாம். குறைந்த பட்சம் அனுதாப செய்தியாவது வெளியிட்டார்களா என்றால் இல்லை. எங்கே பணம் கொடுக்க வேண்டியது வருமோ என்று யாரும் வாய் திறக்கவில்லை. "என்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்" என்று புலம்பிய சூப்பர் ஸ்டார்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததை கண்டுகொள்ள வில்லை. சிவகாசி என்ற படத்தில் நடித்த விஜய்க்கு, காஜல் அகர்வாலோடு டூயட் பாடுவதற்குதான் நேரம் இருக்கிறது. அவரது கவலை இப்போது அவரது துப்பாக்கி தீபாவளிக்கு வெடிக்குமா வெடிக்காதா என்பது பற்றித்தானே தவிர சிவாகாசி பட்டாசை பற்றியும், அங்கே வெடித்து சிதறிய அப்பாவி தொழிலாளர்களையும் பற்றி  அல்ல.

ஆனால் இந்த ஹீரோக்களின் முகத்தில் அடித்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. யாரும் கேட்காமல், யாரும் கோரிக்கை வைக்காமல் தனது மருந்து கம்பெனியில் இருந்து சுமார் 35 லட்சம் மதிப்புள்ள தீக்காய மருந்துகளை சிவகாசிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மம்முட்டி.

தீகாயங்களுக்கான மருந்து தயாரிப்பதில் மம்முட்டிக்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை புகழ்பெற்றது. அக்னிஜித் என்ற மருந்து ரொம்பவே பிரபலம். இந்த மருத்துவமனைக்கு சிவகாசி மருத்துவமனையிலிருந்து அக்ஜினித் மருந்து கேட்டு 35 லட்சம் ரூபாய்கு ஆர்டர் கொடுத்தது. இதைக் கேள்விப்பட்ட மம்முட்டி சிவாகாசிக்கு தேவையான அனைத்து தீக்காய மருந்துகளையும் இலவசமா அனுப்பி வைக்கும்படியும். இன்னும் மருந்துகள் எவ்வளவு தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் அனுப்பி வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் வெடி விபத்தில் காயமடைந்த, 40 பேருக்கு, இலவச ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு, பிரபல நடிகர் மம்முட்டி ஏற்பாடு செய்துள்ளார். கேரளா, கொச்சியில், நடிகர் மம்முட்டி நிர்வகித்து வரும், "பதஞ்சலி ஹெர்பல்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில், காயமடைந்தவர்களுக்கு, "அக்னி ஜித்து என்ற, மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த சிகிச்சைக்கு, 25 லட்சம் ரூபாய் செலவாகும்.

இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஏற்பாடு செய்துள்ள நடிகர் மம்முட்டிக்கு நேற்று பிறந்தநாள். இதுதொடர்பாக, நடிகர் மம்முட்டி கூறுகையில், ""நான், எந்த ஆண்டிலும் பிறந்த நாளை கொண்டாடியதில்லை. இவ்வாண்டும் அப்படியே. சிவகாசி வெடி விபத்து குறித்து அறிந்ததும், மிகுந்த வேதனை அடைந்தேன். காயமடைந்தவர்களுக்கு, நம்மால் முடிந்த உதவிகளை செய்யலாம் என நினைத்து, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளேன், என்றார்.
Courtesy-Dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக