Translate

ஞாயிறு, செப்டம்பர் 02, 2012

61 பேருக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி




காரைக்கால், செப். 1 : காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் 61 பேருக்கு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது.காரைக்கால் மாவட்ட நிர்வாகமும்,  காரைக்கால் வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து 2013-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது. இதற்காக அண்மையில் மாதிரித் தேர்வு நடத்தப்பட்டு 61 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் அசோக்குமார் தொடங்கி வைத்துப் பேசியது : ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு செல்ல மாணவர்களுக்கு ஆங்கில அறிவு மிக முக்கியம். மேலும் பல்வேறு துறைகள் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும். பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இப்பயிற்சி அளிக்கப்படும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையில் நடக்கும் பயிற்சியில் தவறாது கலந்துகொள்ளவேண்டும். தேர்வில் வெற்றிபெறமுடியுமென்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். கடினமாக உழைப்பதன் மூலம் கண்டிப்பாக வெற்றி சாத்தியமாகும். பயிற்சிக்காக நடத்தப்பட்ட மாதிரித் தேர்வு மூலம் பலருக்கு திறமை இருப்பது தெரிய வருகிறது. இப்பயிற்சி நிறைவில் இறுதித் தேர்வு நடத்தப்படும் என்றார் அவர்.சிவகங்கை மனிதவள இலவச பயிற்சி மைய நிறுவனரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஆர்.கற்பூர சுந்தரபாண்டியன், ரேடியன் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனர் ராஜபூபதி ஆகியோரும் பேசினர். பயிற்சி பெறுவோருக்கு புகைப்பட அடையாள அட்டையும், தேர்வுக்கான நுணுக்க கையேடும் வழங்கப்பட்டது. காமராஜர் பொறியியல் கல்லூரி முதல்வர் தம்பிதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக