Translate

புதன், செப்டம்பர் 19, 2012

2017க்குள் இந்தியாவில் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்

   டெல்லி: உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியா சார்பில் வரும் 2017ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
   சாதாரண கம்ப்யூட்டர்களை விட, பல மடங்கு வேகமான செயல்திறன் கொண்டதாகவும், கடினமான கணக்குகளையும் வினாடிகளில் செய்யும் திறன் கொண்ட கம்ப்யூட்டர்கள் சூப்பர் கம்ப்யூட்டர் என அழைக்கப்படுகிறது. இவ்வகை கம்ப்யூட்டர்கள் ராணுவம், விண்வெளி, ஆராய்ச்சிக்கூடம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
   உலகில் முதன் முதலாக சூப்பர் கம்ப்யூட்டர் 1960களில் அறிமுகமானது. இந்தியா திட்டமிட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர், தற்போது உள்ள அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரான ஐ.பி.எம் நிறுவனத்தின் "செகுயா&' வை விட 61 மடங்கு வேகமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு 4,700 கோடி ரூபாய். திட்டமிடப்பட்டுள்ள காலம் 5 ஆண்டுகள்.
  பெடfலொப் என்பது கம்ப்யூட்டரின் வேகத்தை குறிக்கிறது. ஒரு பெடfலொப்ஒரு வினாடிக்கு ஆயிரம் டிரில்லியன் வேகத்தில் செயல்படும் திறன் கொண்டது. ஒரு டிரில்லியன்க்கு, 1க்கு அருகில் 18 பூஜ்ஜியங்களை சேர்க்க வேண்டும். அப்படியென்றால் இதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
   2012ம் ஆண்டின் உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக தேர்வு செய்யப்பட்ட ஐ.பி.எம்., நிறுவனம் தயாரித்த "செகுயா&' என்ற சூப்பர் கம்ப்யூட்டரின் வேகம் 16.32 பெடfலொப் அதாவது 7.8 லட்சம் அதிவேகமான லேப்டாப் கம்ப்யூட்டர்களை ஒன்றிணைப்பதற்கு சமம். ஆனால் மத்திய அரசு திட்டமிட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டரின் வேகம், இந்த ஐ.பி.எம்., கம்ப்யூட்டரின் வேகத்தை விட 61 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களின் வரிசையில், இந்தியா தற்போது 58வது இடத்தில் உள்ளது. இந்தியா முதன்முதலாக 1987ம் ஆண்டு சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டது. நாட்டின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் "பரம்&'.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக