Translate

ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

குவைத் சிறையில் 1, 500 இந்தியர்கள் ; விசா விதி மீறல் வழக்கில் சிக்கியவர்கள்


வேலை விஷயமாக பிழைக்க குவைத் சென்றவர்கள் 1, 500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் இவர்களை மீட்கும் பணியினை துரிதப்படுத்த இரு நாட்டு அரசுகளும் இணைந்து பேசி நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்கெய்லாட் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீப காலமாக குவைத் அரசாங்கத்தின் கெடுபிடிகள் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் சென்று பணியாற்றும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு பிரச்னையும் சட்டரீதியிலான தொந்தரவும் அதிகரித்து வருகிறது.

சமீப காலங்களில் விசா விதிகள் மீறியதாக இது வரை ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டார் அங்கு சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகம் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தலையிட வேண்டும். பிரதமர் அலுவலகம் முறையான நடவடிக்கைகைள மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக