Translate

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு நிறைவு - 55055 இடங்கள் காலி

சென்னை: தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வின் அனைத்துப் பிரிவு செயல்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், சுமார் 55055 இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் வழக்கம்போல் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. அதேபோல் CECRI மற்றும் CIPET போன்ற கல்வி நிறுவனங்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. அரசு உதவிபெறும் கல்லூரிகளில், 1 இடம் மட்டுமே காலியாக உள்ளது.
CATEGORY OVER ALL INTAKE OVER ALL ALLOTTED OVER ALL VACANCY
ANNA UNIVERSITY 2175 2175 0
UNIVERSITY COLLEGES 5520 4890 630
GOVERNMENT COLLEGES 2860 2860 0
GOVERNMENT AIDED COLLEGES 2121 2120 1
CECRI AND CIPET 155 155 0
SELF FINANCING COLLEGES 169628 115204 54424
OVER ALL TOTAL 182459 127404 55055
புதிதாக 32 கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், அவற்றில் பல கல்லூரிகளில் மாணவர்களே சேரவில்லை என்ற நிலையே இந்தாண்டு நிலவுகிறது. கடந்த 2011ம் ஆண்டு, கலந்தாய்வு முடிவில், சுமார் 44000 இடங்கள் காலியாக இருந்தன.
ஆனால், இந்தாண்டு பல புதிய கல்லூரிகளின் வரவால், அந்த இடங்களையும் சேர்த்து, சுமார் 55055 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, காலியிட நிலவரத்தைப் பொறுத்தவரை, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், பெரிய மாறுதல் இல்லை என்றே கூறலாம்.

                                                                                    Courtesy---DINAMALAR.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக