Translate

ஞாயிறு, மே 06, 2012

GLOBAL WARMING STARTING IT"S DUTY

பனி ஏரி உடைந்து 10 பேர் சாவு; 60 பேரை காணவில்லை

            காத்மாண்டு, மே 5: நேபாளத்தின் வட மேற்குப் பகுதியில், இமயமலையின் உயரமான பகுதியில் அமைந்துள்ள பனி ஏரி உடைந்தது. இதனால் அப்பகுதியில் பாயும் சேடி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் நிகழ்வால் பொகாடா பகுதியில் உள்ள வீடுகள், பண்ணைகள், கால்நடைகள் ஆகியன வெள்ளத்தில் மூழ்கின. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 60 பேரைக் காணவில்லை.தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கஸ்கி மாவட்டத்தில் இந்த நதி பாய்கிறது. இதில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், மசாபுசாரே மலைமுகடில் அமைந்துள்ள சர்திகோலா கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது.ராணுவத்தினரும், காவல்துறையும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்படுகின்றன. நதிக்கரையிலிருந்து இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நதியில் நீர்மட்டம் மிகவும் உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.இந்த வெள்ளப்பெருக்கில் 60 பேர் காணாமல் போயுள்ளனர். அதில் ரஷியாவைச் சேர்ந்த 3 சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். நதிக்கரையோரம் நின்றிருந்த லாரிகளையும், பஸ்களையும் வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. அன்னப்பூர்ணா சிகரத்தின் கீழ் அமைந்துள்ள காராபானி கிராமமும் இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டது. இங்குள்ள இரண்டு பெரிய கட்டடங்களும், பல குடில்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.எந்தத் தாமதமுமின்றி மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பாபுராம் பட்டாராய் உத்தரவிட்டுள்ளார். வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடத்தில் அன்னப்பூர்ணா, தவளகிரி, நீலகிரி ஆகிய சிகரங்கள் உள்ளன. இவற்றின் உயரம் 8000 ஆயிரம் மீட்டருக்கும் அதிகம் என்பதால் சாகச சுற்றுலாப் பயணம் செய்வோரை இப்பகுதி கவர்ந்திழுக்கிறது. சாகச சுற்றுலாவுக்கான சீசன் இன்னும் தொடங்கவில்லை என்பதால் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக